Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 மார்ச் 07 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில், கால்நடைகளின் இறப்பு தற்போது அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட், கால்நடைகளின் தொடர் இறப்பைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இதுவரை இறந்த கால்நடைகளுக்காக, இழப்பீடும் வழங்கப்பட வேண்டும் என்றும், கால்நடை அபிவிருத்தி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கால்நடைகளின் அதிகரித்த இறப்பின் காரணமாக, கால்நடை வளர்ப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், எனவே, கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு, கால்நடை அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில், கால்நடை வளர்ப்பும் பிரதான தொழில்களில் ஒன்றாக இருந்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், பலர், இதனைப் பண்ணைத் தொழிலாளாகக் கொண்டு செயற்பட்டு, தமது வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கால்நடைகள் நோய்த்தொற்றுக் உள்ளாகி இறந்து வருவதால், பண்ணைத் தொழலை மேற்கொள்வோரும் சிறிய அளவில் கால்நடைகளை வளர்த்து வருவோரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்த் தொற்றுக் குறித்து, தீவிர கவனம் செலுத்தி, அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சு, உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், இவ்விடயத்தில் கிழக்கு மாகாண ஆளுநரும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago