Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 நவம்பர் 14 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளையோர் சமுதாயத்தை தவறாக வழிநடத்தும் வகையில் அமைந்துள்ளது எனக் கருதி, மட்டக்களப்பு - கல்லடி சந்தியில் படமாளிகையொன்றில் பொருத்தப்பட்டிருந்த சர்கார் திரைப்படத்தின் கதாநாயகன் இளைய தளபதி விஜயின் பிரமாண்டமான பதாதை, மட்டக்களப்பு மாநகர சபை பிரதி ஆணையாளரின் எழுத்துமூல அறிவுறுத்தலுக்கமைய அகற்றப்பட்டுள்ளது.
இந்தப் பதாகை, நடிகர் விஜய், சிகரெட் புகைக்கும் விதத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இது குறித்து மட்டக்களப்பு மாநகர சபை பிரதி ஆணையாளர் என். தனஞ்ஜெயன், படமாளிகை முகாமையாளருக்கு அனுப்பி வைத்திருந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
“தங்களின் படமாளிகையின் முன்பாக இளைஞர் சமுதாயத்தை தவறான பாதையில் இட்டுச் செல்லும் வகையில், பதாதைகளைக் காட்சிப்படுத்தியுள்ளமை தொடர்பாக இது இளைஞர்களைத் தவறான பாதையில் இட்டுச் செல்லும் என்பதால், இதனை அகற்றுமாறு தங்களைப் பலமுறை எச்சரித்திருந்தும் அப்பதாதையை இதுவரை அகற்றாதுள்ளீர்கள்.
“எனவே, இதனை உடனடியாக அகற்றுமாறு கேட்டுக்கொள்வதோடு, தவறும்பட்சத்தில் சினிமாப் படங்களை வெளியிடுவதற்கு மாநகர சபையால் வழங்கப்பட்ட தங்களுக்கான அனுமதி இரத்துச் செய்யப்படும் என்பதையும் அறியத் தருகின்றேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த இறுதி எச்சரிக்கை அறிவித்தலின் பின்னர் சர்ச்சைக்குரிய விஜயின் சிகரெட் புகைக்கும் காட்சியிலமைந்த பதாதை சம்பந்தப்பட்ட படமாளிகை நிர்வாகத்தினரால் உடனடியாக அகற்றப்பட்டது.
கிடைக்கப்பெற்ற புகார்களுக்கு அமையவே, மேற்படி பதாதையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராசா சரவணபவன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago