Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூலை 06 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, கல்குடாக் கல்வி வலயத்துக்குட்பட்ட கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தரத்துக்கான கலைப்பிரிவு முதன்முதலாக புதன்கிழமை (5) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இக்கலைப்பிரிவில் 20 மாணவர்கள் இணைந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு கற்றல் உபரகணங்கள் வழங்கி வைக்கப்பட்டு, கற்றல் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், இக்கலைப்பிரிவுக்கு வகுப்புப் பொறுப்பாசிரியையாக தங்கராஜா ஜஜிதா நியமிக்கப்பட்டுள்ளார்.
1910ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வித்தியாலயமானது, இதுவரைகாலமும் பாலர் வகுப்பு முதல் க.பொ.த சாதாரணதரம்வரையே இயங்கி வந்தது.
இவ்வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு 107 வருடங்களின் பின்னர,; தற்போது கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என, வித்தியாலய அதிபர் தங்கராஜா இதயராஜா தெரிவித்தார்.
இந்த வித்தியாலயத்தில் தற்போது 29 ஆசிரியர்கள் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடுவதுடன், 568 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
வகுப்பறைகள் இல்லாமையால், மாணவர்கள் தகரக் கொட்டில்களிலும் மர நிழல்களின் கீழும் கல்வி கற்று வருகின்றனர். இந்த வித்தியாலயமானது பல்வேறு வளப் பற்றாக்குறைகளுடன் இயங்கி வருகின்றது எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
42 minute ago
49 minute ago
51 minute ago