Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 25 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவில், கிரான், வாழைச்சேனை கமநல சேவை நிலையங்களுக்குட்பட்ட விவசாய நிலங்களில் பெரும்போக பயிற்செய்கை மேற்கொள்வதற்கான ஆரம்பக் கூட்டம், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில், கிரான் றெஜி கலாசார மண்டபத்தில், இன்று (25) நடைபெற்றது.
இதன்போது, இப்பிரதேசத்தில் 20, 952 ஏக்கர் விவசாய நிலங்களில், பெரும்போக பயிற்செய்கை பண்ணப்படுவதற்கான முன்னாயத்தங்கள், நீர்ப்பாசனம், மானிய உர விநியோகம் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இவ்விவசாய நிலங்களில் சிறிய நீர்ப்பாசன குளங்கள் மூலமாக நீரைப் பெற்றுக்கொள்ளும் 2,097 ஏக்கர் நிலத்திலும், மானாவாரி 15,910 ஏக்கர் நிலத்திலும், மேட்டு நில பயிற்செய்கையானது 2,945 ஏக்கரிலும் நெற்செய்கை பண்ணப்படவுள்ளன.
இப்பயிர் செய்கை நிலங்களுக்குத் தேவையான உரங்களை தட்டுப்பாடின்றி பெற்றுக்கொடுக்கத் தேவையான நடவடிக்கைகளை ஏற்கெனவே மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இம்முறை மானியமாக வழங்கப்படும் இரசாயனப் பசளையுடன் சேர்த்து சேதனப் பசளையும் வழங்கப்படவுள்ளது.
இதுதவிர, இம்முறை நெற்செய்கை பண்ணவுள்ள விவசாயிகளிடம் தரப்படுத்தப்பட்ட விதை நெற்களை செய்கை பண்ணுமாறும், மறுபயிர் செய்கை பன்னுவதற்கு ஆர்வ மூட்டப்பட்டதுடன், விவசாயிகளினது சந்தேகங்களுக்கான விளக்கங்களும் சம்மந்தப்படப்ட அதிகாரிகளால் வழங்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
48 minute ago
56 minute ago
1 hours ago