Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 ஜனவரி 20 , பி.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிராம சகவாழ்வைப் பாதுகாத்து, இன மத முறுகல்களைத் தடுப்பதற்கு, கிராம சேவையாளர்களைத் தயார் நிலையில் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் தெளிவுபடுத்தல் நிகழ்வு, தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன் தலைமையில், மட்டக்களப்பு கல்லடி கிறீன் கார்டன் விடுதியில், இன்று (20) நடைபெற்றது.
தேசிய சமாதானப் பேரவையின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஆசிய மன்றத்தின் சமாதானத்தக்கும் சமூகக் கலந்துரையாடலுக்குமான நிகழ்ச்சித் திட்ட அலுவலர் செலினா கிறேமர், தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் சம்சுதீன் ஷாபி நயாஜ், மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம் கிராம சேவையாளர்கள் சுமார் 40 பேர் உட்பட மட்டக்களப்பு மாவட்ட சமாதானப் பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இலங்கையில் அனைத்து மதங்கள் மற்றும் அனைத்து இனங்களுக்கிடையில் நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய சகவாழ்வுக்கான செயற்றிட்டங்களில் கிராமங்களில் சமாதானத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஓரம்சமாக இது இடம்பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
2 hours ago