2025 மே 22, வியாழக்கிழமை

கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கைகலப்பு ;மைதானத்தில் பதட்டம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 செப்டெம்பர் 25 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, காத்தான்குடியில் நேற்று  (24) மாலை நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப் போட்டியொன்றில் ஏற்பட்ட கைகலப்பில் இருவர் காயமடைந்துள்ளனர் என்பதுடன், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

 

காத்தான்குடி - குபா விளையயாட்டுக்கழகம், காத்தான்குடி அல்ஹிறா பாடசாலை மைதானத்தில் கிரிக்கெட் சுற்றுப் போட்டியொன்றை நடத்தியது.

 

இதில் அரையிறுதிப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த போது, மத்தியஸ்தர் ரண் அவுட் ஒன்றை கொடுக்கவில்லை என்பதற்காக அங்கு விளையாடிய ஒருவர் மத்தியஸ்தரைத் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து, மைதானத்தில் பிரச்சினை ஏற்பட்டது. அப்பிரச்சினை ஒருவாறு சுமூகமாகத் தீர்க்கப்பட்டிருந்த நிலையில், அங்கு வந்த ஒரு சிலர்,  கிரிக்கெட் சுற்றுப்போட்டியை நடத்தியவர்களைத் தாக்கியதுடன், அங்கு வைக்கப்பட்டிருந்த கிண்ணங்களை உடைத்ததுச் சேதப்படுத்தி, மேடை மற்றும் கதிரை, மேசைகளையும் உடைத்துச் சேதப்படுத்தினர்.

இதனால் அங்கு பதட்ட நிலை ஏற்பட்டது.

பின்னர் காத்தான்குடி பொலிஸார் வந்து விசாரணைகளை மேற்கொண்டு அங்கிருந்து சென்ற பின்னர் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஏற்கெனவே அங்கு வந்து தாக்கிய அதே நபர்கள் மீண்டும் மைதானத்துக்குள் சென்று குழப்பம் விளைவிக்க முற்பட்ட போது, கைகலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, இப்போட்டி இடை நிறுத்தப்பட்டது.

பின்னர் மீண்டும் அங்கு விரைந்த பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கைகலப்பு சம்பவத்தால் இருவருக்கு காயம் ஏற்பட்டதுடன், ஒருவரை கைதுசெய்துள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .