Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
பேரின்பராஜா சபேஷ் / 2018 ஜூலை 30 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதேசக் கிளைகளைப் புனரமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல், மட்டக்களப்பு தலைமைக் காரியாலயத்தில், நேற்று (29) நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா கலந்துகொண்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் சிரேஷ்ட உபதலைவருமான பொன்.செல்வராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக் கிளையின் தலைவருமான பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அதிகார சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சபைத் தலைவர்கள், உபதலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கடந்த ஜூன் மாதம் முல்லைத்தீவில் இடம்பெற்ற, மத்திய செயற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கமைய, கட்சியின் கிளைகளைப் புனரமைப்பது தொடர்பில், வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் குழுக்கள் அமைக்கப்பட்டு, புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இக்கலந்துரையாடலில், கட்சியின் செயற்பாடுகள், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முகங்கொடுக்க நேரிட்ட சவால்கள் பற்றி, கட்சியின் தலைவரால் தெரிவிக்கப்பட்டதுடன், கட்சியின் பிரதேசக் கிளைகளை புனரமைப்பது, அதற்கான தினங்களை நிர்ணயிப்பது தொடர்பிலான பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .