2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’கிழக்குக்கு 110 வைத்தியர்கள் தேவை’

Editorial   / 2017 ஜூலை 03 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்  

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலுமுள்ள அரசாங்க வைத்தியசாலைகளுக்கும், 110 வைத்தியர்கள் தேவைப்படுவதாக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

'கிழக்கு மாகாண சுகாதாரத்துறையை, மத்திய அரசாங்கம் தொடர்ந்தும் புறக்கணித்து வருகின்றது. இவ்வருடத்தில் மாத்திரம் இம்மாகாணம், சுகாதாரத் துறைக்கான ஆளணிப் பிரச்சினைகள் மற்றும் நிதிப் பிரச்சினை போன்ற சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.

கிழக்கு மாகாண சுகாதாரத்துறை அபிவிருத்திக்காக, கடந்த வருடம், 690 மில்லியன் ரூபாய் நிதி,  மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது. ஆனால் இவ்வருடம், 220 மில்லியன் ரூபாய் மாத்திரமே ஒதுக்கப்பட்டிருப்பதால், எமது மாகாணத்தில் இன்னும் அதிகமான தொடர் வேலைகளை செய்வதில் சிக்கல்கள் உள்ளன' என்றும் அவர் குறிப்பிட்டார்.

'இது தொடர்பாக, நாம் மத்திய அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளோம். அதனைத் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மிக விரைவில் மேற்கொள்ளப்படும். மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும், பிராந்திய சுகாதாரச் சேவைப் பணிமனைகள் ஊடாக, வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில், பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

இந்நிலையில், மத்திய அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளால், சில பிரச்சினைகளுக்கு எம்மால் சரியான தீர்வை வழங்க முடியாமல் உள்ளது' என,  அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X