Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
பேரின்பராஜா சபேஷ் / 2017 செப்டெம்பர் 25 , பி.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களினதும் முதலாம், இரண்டாம், மூன்றாம்; வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை (03) ஆரம்பமாகும் என கிழக்குப் பல்கலைக் கழக பதிவாளர் ஏ எல் ஜௌபர் ஸாதிக் தெரிவித்துள்ளார்.
விடுதி வசதிகளுக்கு தகுதியான அனைத்து மாணவர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை (02) 06.00 மணிக்கு முன்னர் தத்தமது விடுதிகளுக்கு சமூகம் தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் தமக்கு விடுதி வசதி ஏறப்படுத்தி தருமாறு கோரி ஓகஸ்ட் 08ஆம் திகதி முதல் வந்தாறுமூலை வாளக நிருவாக கட்டடத்தை முற்றுகையிட்டு, சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பல்கலைக் கழக நிருவாக நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து கிழக்குப் பலக்லைக் கழகத்தில பேரவை நிலைமை தொடர்பாக ஆராய்ந்து ஓகஸ்ட் 17 ஆம் திகதி முதல் திருகோணமலை வளாகம் தவிர்ந்த வந்தாறுமூலை வளாகம் மற்றும் மட்டக்களப்பு சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடம் ஆகியவற்றை மூடுவதற்கு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .