2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணி

Princiya Dixci   / 2022 ஏப்ரல் 04 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்

அரசின் பொருளாதார கொள்கைக்கு எதிராகவும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள  பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு கோரியும், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், இன்று (04) காலை ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.

கிழக்கு பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாகத்தின் தகவல் தொழில்நுட்ப மற்றும் விவசாய பீடம் அமைந்துள்ள தொகுதியின் நுழைவாயிலில் ஆரம்பமான பேரணி, கொம்மாதுறை - திருவள்ளுவர் வீதியூடாக சென்று, மட்டக்களப்பு - திருமலை வீதியில் அமைந்துள்ள  வந்தாறுமூலை பிரதான வளாகம் வரை சென்றது.

பிரதான வீதியில் ஒன்றுகூடிய மாணவர்கள், தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உணவு இல்லை, எண்ணெய் இல்லை, மின்சாரம் இல்லை, கேஸ் இல்லை, பொருள்களின் விலை, வரிச்சுமைகளை குறையுங்கள் மற்றும் மக்களுக்கு நிவாரணம் வழங்குங்கள் போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X