Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரி பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையத்தால் நடத்தப்படும் கலை, கலாசார மற்றும் வர்த்தக முகாமைத்துவ பீட வெளிவாரி மீள் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளதாக, பல்கலைக்கழக பதிவாளர் ஏ.எல்.ஜஃபர் சாதிக் தெரிவித்தார்.
கலை, கலாசார 3ஆம் வருட பரீட்சைகள், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி முதல் நடைபெறவுமெனவும் வர்த்தக முகாமைத்துவ பீட 1ஆம், 2ஆம், 3ஆம், 4ஆம் வருடங்களுக்கான பரீட்சைகள், ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி தொடக்கம் நடைபெறவுமெனவும், இன்று (28) அவர் தெரிவித்தார்.
கடந்த ஜுலை மாதம் 29ஆம் திகதி முதல் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலை காரணமாக தொடரமுடியாமல் போன கலை, கலாசார இரண்டாம் வருட மீள் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 30ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மீள் பரீட்சைகளுக்கான நேர அட்டவணைகளை, கிழக்குப் பல்கலைக்கழக www.cedec.esn.ac.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாமெனவும் பதிவாளர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .