2025 மே 15, வியாழக்கிழமை

கிழக்கு மாகாணத்துக்கென தனி அமைச்சு; ‘அபிவிருத்திக்கு வித்திட்டுள்ளது’

வா.கிருஸ்ணா   / 2018 நவம்பர் 07 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்துக்கென தனி அமைச்சை உருவாக்கியதன் மூலம், அபிவிருத்திக்கு வித்திடப்பட்டுள்ளதாகவும் அதற்காக ஜனாதிபதிக்கு விசேட நன்றியை, கிழக்கு மாகாண மக்கள் சார்பாக தெரிவித்துக்கொள்வதாகவும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான எஸ்.வசந்தராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பில், நேற்று (07) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த மூன்றரை வருட ஆட்சியில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பிடத்தக்க எந்த அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்கள் தொடர்ந்தும் எந்தவித அபிவிருத்தியையும் காணாத நிலையே இருந்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உட்கட்சிப் போராட்டம் அதிகரித்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்பின்போதே, அக்கட்சியில் உள்ளவர்களின் நிலைப்பாடு தெரியவரும் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .