Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 மே 08 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்பட்டிருக்கின்றன என, அச்சங்கத்தின் தகவல் தொடர்பு அதிகாரி வைத்தியர் எம்.ஏ. சுஹைல் அஹமட், இன்று (08) தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுடன், கடந்த ஏப்ரல் மாதம் 10 திகதி இடம்பெற்ற சந்திப்பில் வாக்குறுதியளிக்கப்பட்ட விடயங்கள் அமுல்படுத்தப்படாமல் உதாசீனம் செய்யப்பட்டன எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, கிழக்கு மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், கடந்த 26ஆம் திகதி, கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.
தமது கோரிக்கைக்கு அமைவாக, அரச வைத்தியர்களுக்கு 2018 ஜனவரியிலிருந்து அதிகரிக்கப்பட்ட மேலதிக நேரக் கொடுப்பனவுகள், புதிய சுற்றறிக்கையின்படி, மே மாதத்துக்குரிய சம்பளப் பட்டியலில் புதிதாக மாற்றியமைக்கப்பட்ட மேலதிக நேரக் கொடுப்பனவு சேர்த்துக் கொள்ளப்படல், அங்கு தகுதியுடைய வைத்திய நிர்வாகி நியமிக்கப்படல், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஒரு பிரதிப் பணிப்பாளர் வெற்றிடத்துக்கு இரு பிரதிப் பணிப்பாளர்கள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளமை போன்ற விடயங்களுக்குத் தீர்வுகள் எட்டப்பட்டிருக்கின்றன என, அவர் தெரிவித்தார்.
தமது அமைப்பு , முன்னதாக மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாடுகள் அமுலாக்கப்படாமல் உதாசீனம் செய்யப்பட்டதால், தாம் வேறு வழியின்றி தொழிற்சங்க நடவடிக்கைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும், அது தற்போது வெற்றியளித்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும், வைத்தியர் எம்.ஏ. சுஹைல் அஹமட் மேலும் கூறினார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago