Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
கே.எல்.ரி.யுதாஜித் / 2018 ஜூலை 20 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலக மாகாணப் பணிப்பாளரும் இலங்கைத் திட்டமிடல் சேவையின் சிரேஷ்ட அதிகாரியுமான இரா.நெடுஞ்செழியன், சீன அரசாங்கத்தின் அழைப்புக்கிணங்க திட்டங்களை அடையாளம் காணல் மற்றும் திட்டமிடல் திட்ட அமுலாக்கம், முகாமைத்துவம் தொடர்பான மூன்று வார கால பயிற்சிக்காக சீனா செல்கிறார்.
இரா.நெடுஞ்செழியன், இம்மாதம் 20ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருந்து இப்பயிற்சியில் கலந்துகொள்வார் எனத் தெரிய வருகிறது.
மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த இலங்கைத் திட்டமிடல் சேவையின் சிரேஷ்ட அதிகாரியான இரா.நெடுஞ்செழியன், மிக அண்மையில் இடமாற்றப்பட்டு, கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலக மாகாணப் பணிப்பாளராக நியமனம் பெற்றவர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .