Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
“கிழக்கு மாகாணத்தில் சமூகங்கள் பாரதூரமாக துருவமயப்பட்டு பிரிந்து தனிமையாகி நிற்கும் நிலை காணப்படுவது கவலையளிப்பதாய் உள்ளது. இந்த நிலைமை உடனடியாக அகற்றப்பட வேண்டும்” என, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் எதிர்பார்ப்பு தொடர்பாக அமைச்சர் இன்று (23) கருத்து வெளியிடும்போதே, இதனைத் தெரிவித்தார்.
இது பற்றி தொடர்ந்து கூறிய அவர்,
“நாம் அறிந்த வகையில் கிழக்கு மாகாணம் இன ஒருங்கிணைவுள்ள ஒரு மாகாணம். இன சமத்துவமும் இங்கிருக்கின்றது. நாங்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி எல்லோரும் சேர்ந்து ஓர் இணக்கப்பாட்டு ஐக்கிய ஆட்சியை, முதலமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் நிறுவியுள்ளோம்.
“அந்த மாகாண அரசாங்கத்திலே அனைத்து சமூக மக்களின் எதிர்பார்ப்பையும் தேவைகளையும் தழுவியதாக மாகாண நிர்வாகம் செயற்படுத்தப்படுகின்றது. ஆனால், இப்பொழுது அடிமட்டத்தில் என்ன எதிர்பார்க்கப்படுகின்தென்றால், வித்தியாசமான உணர்வலைகளுடன் கூடிய ஆதங்கம் உள்ளது.
“இன நுணுக்குக் கண்ணாடி அணிந்துதான் மக்கள் அபிவிருத்தியையும், ஏனைய நிர்வாகக் கருமங்களையும் உற்றுநோக்குகின்ற நிலைமை காணப்படுகின்றது.
“எமது பகுதிக்கு, எமது இனத்துக்கு, எமது மக்களுக்கு என்ன வந்தடைந்திருக்கின்றது என்றே கேள்வி எழுப்பப்படுகின்றது.
இது போன்ற மனப்பாங்குகளால் கிழக்கு மாகாணத்தில் பாரதூரமாக துருவப்பட்டு பிரிந்து தனிமையாகி நிற்கும் நிலை சமூகங்களுக்கிடையில் காணப்படுகின்றது.
“இத்தகைய துருவப்பட்டு தனிமையாகி நிற்கும் நிலை சமூகங்களுக்கிடையிலிருந்து உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
பழைய சிந்தனைகளை மறந்து ஆக்கபூர்மான புதிய நோக்கு பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இது காலத் தேவையாகும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
3 hours ago