Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 மார்ச் 03 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, வ.திவாகரன், அப்துல்சலாம் யாசீம்
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 313 பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனங்கள், மட்டக்களப்பு, வெபர் மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், இன்று (03) வழக்கி வைக்கப்பட்டன.
212 சிங்கள மொழிமூலமான பட்டதாரிகளுக்கும் 91 தமிழ் மொழிமூலமான பட்டதாரிகளுக்கும், இந்த ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.
இந்த வைபவத்தில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம உட்பட மாகாண முன்னாள் அமைச்சர்கள், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர், கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், சமயப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 300 பாடசாலைகளுக்கு விஞ்ஞான ஆய்வு உபகரணங்களும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டன.
இதற்கான பத்திரத்தை, அதிபர்களிடம், ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
ஜனாதிபதியின் இந்த மட்டக்களப்பு விஜயத்தின் போது, மட்டக்களப்பில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ரீ மாமங்கேஸ்வரர் ஆலயத்துக்கும் சென்றதுடன், அங்கு வழிபாடுகளிலும் ஜனாதிபதி ஈடுபட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
18 May 2025