2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘கிழக்கையும் கட்டியெழுப்புவேன்’

Editorial   / 2019 மார்ச் 25 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், க.விஜயரெத்தினம்

 

வடக்கு அபிவிருத்தி அமைச்சினூடாக அம்மாகாணத்தில் எவ்வாறு அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகின்றதோ, அதற்குச் சமாந்தரமாக, கிழக்கு மாகாணத்திலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை செயற்படுத்துவேன் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.

10 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய வைபவத்தில் உரையாற்றிய போதே, இவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் விசாலமான திட்டங்களில் ஒன்றாக, காணியற்றவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.

அத்துடன், கிழக்கு மாகாணத்துக்குத் தான் அடிக்கடி வந்திருப்பதாகவும் இம்மாகாண அபிவிருத்திக்காகக் கூட்டங்களை நடத்தி, அதனைச் செற்படுத்துவேன் எனவும் அவர் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X