Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூலை 05 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முன்வர வேண்டும் என, அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.எஸ்.ஸாபி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இம்மாகாணத்தில் வேலை வாய்ப்பின்றியுள்ள இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டுமென்பதுடன், யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட எல்லைக் கிராமங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுப்பட வேண்டும். ஆகவே, மேற்படி விடயங்கள் தொடர்பில் ஐ.தே.க கவனத்திற்கொள்ள வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐ.தே.கவின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் றுவான் விஜயவர்த்தனவுக்கும் இடையிலான சந்திப்பு, காத்தான்குடியில் செவ்வாய்க்கிழமை (4) மாலை நடைபெற்றது. இதன்போதே, மேற்படி வேண்டுகோளை அவர் முன்வைத்துள்ளார்.
இச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தபோது,'மட்டக்களப்பு மாவட்டத்தை ஐ.தே.க கைவிடக் கூடாதென்பதுடன், ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இம்மாவட்டத்துக்கு மேற்பார்வையாளராக நியமிக்கப்பட வேண்டும்' என்றார்.
'குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தை ஐ.தே.க கைவிட்டுள்ளதா என்று எண்ணத் தோன்றுகின்றது. ஏனெனில், இம்மாவட்டத்தில் ஐ.தே.கவின் வளர்ச்சியை தற்போது காண முடிவதில்லை.
'கடந்த மே தினக் கூட்டத்தின்போது, நாடு பூராகவும் ஐ.தே.கவின் சுவரொட்டிகள் மற்றும் விளம்பர அட்டைகள் காணப்பட்ட போதிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் அவை காணப்படவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்துக்கென்று ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தாவிலிருந்து சுவரொட்டிகள் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
'கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஐ.தே.கவைப் பிரதிநிதித்துவப்படுத்தி சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் சென்றுள்ளார்கள். இன்று அந்த நிலைமை இல்லை' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
45 minute ago
52 minute ago
54 minute ago