2025 மே 15, வியாழக்கிழமை

குடிநீருக்காக...

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 நவம்பர் 05 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

குவைத் நாட்டு “அல்-நஜாத் அறக்கொடை” அமைப்பால், இலங்கை அந்-நூர் அறக்கொடை ஸ்தாபனத்தின் ஊடாக, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளை பொது இடங்களில் ஏற்படுத்திக் கொடுத்து வருவதாக, அந்-நூர் கொடையாளி அமைப்பைச் சேர்ந்த சமூக சேவையாளர் எம்.எல்.எம். அப்துல் றஹ்மான் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ், ஏறாவூரில் அமைக்கப்பட்ட நீர்த் தாங்கிகளைக் பிரதேச மக்களிடம் கையளிக்கும் வைபவம், இன்று (05) நடைபெற்றது.

ஏறாவூரில் வைத்தியசாலை, பொதுச் சந்தை, பாடசாலைகள் என்பனவற்றுக்கு அருகாமையில், ஏழு இடங்களில் 1,500 லீற்றர் கொள்ளளவுள்ள ஏழு நீர்த் தாங்கிகளும்,  நீரைச் சுத்திகரிக்கும் உபகரணமும், சுமார் ஒரு இலட்சத்து 58,000 ஆயிரம் ரூபாய் செலவில் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .