2025 மே 14, புதன்கிழமை

குடும்ப பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் மீட்பு

Editorial   / 2019 ஜனவரி 04 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய், ஜின்னா வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலம், தீயில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம், நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று பிள்ளைகளின் தாயாரான 35 வயதுடைய சித்தி றசீனா இக்பால் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம், பிரேத பரிசோதனைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .