Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 04 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.திவாகரன்
மண்முனை தென்மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை - மணல்பிட்டி பிரதான வீதியின் அருகே இரவு நேரங்களில் குப்பை கொட்டுபவர்களைக் கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பில், அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், கொக்கட்டிச்சோலை - மணல்பிட்டி வீதியின் அருகில், கடந்த காலங்களில் இரவு நேரங்களில் வர்த்தக நிலையங்களின் கழிவுகள், வீட்டுக்கழிவுகள் போன்றன வீதியின் ஓரங்களில் இனந்தெரியாதோரால் வீசப்பட்டு வந்தனவென்றார்.
அவ்வாறு வீசப்பட்ட கழிவுகள், குறித்த வீதியின் இருபக்கமும் நிரம்பி காணப்பட்டமையுடன், துர்நாற்றமும் வீசத்தொடங்கிய நிலையில் பிரதேசசபையால் அப்பகுதி அண்மையில் சிரமதானம் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, பிரதான வீதிகளின் ஓரங்களிலும் பொது இடங்களிலும் கழிவுகளைக் கொட்டுபவர்களைக் கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் இதன்மூலம் அந்நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
7 hours ago
8 hours ago