Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 ஒக்டோபர் 02 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
குற்றச் செயல்களை குறைக்க பொலிஸாருக்கு பொதுமக்கள் உதவியாக இருக்க வேண்டுமென, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்.கபில ஜெயசேகர தெரிவித்தார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள சிவில் பாதுகாப்புக்குழு தலைவர்களுக்கான கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
காத்தான்குடி பீச்வே ஹோட்டல் மண்டபத்தில் நேற்று (01) நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர் தெரிவித்ததாவது,
“சிவில் பாதுகாப்புக்குழுக்கள் திறம்படச் செயலாற்றி வருகின்றன. மேலும் சிறப்பாக செயலாற்ற வேண்டும். பாதுகாப்புக்குழுக்கள், பொலிஸாருடன் சிவில் இணைந்து செயலாற்றும் போது, குற்றச் செயல்களை இல்லாமலாக்க முடியும்.
“நாம் அனைவரும் இலங்கையர்கள். நம்மிடையே சாதி, சமய, இன, மொழி வேறுபாடுகள் இருக்கக் கூடாது. நம்மிடையே, “இலங்கையர்” என்ற உணர்வு இருக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றுபட்டு, நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்” என்றார்.
இந்தக் கூட்டத்தில் மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயக்கொட ஆராச்சி, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராய்ச்சி, காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில், மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யு.எல்.நசிர்தீன், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.ஜாபீர் உட்பட பொலிஸார், சிவில் பாதுகாப்பு குழுத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago