Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
வடிவேல் சக்திவேல் / 2018 நவம்பர் 10 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழைவீழ்ச்சியால் மாவட்டத்திலுள்ள குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதோடு, வான் கதவுகளும் திறந்து விடடப்பட்டுள்ளதாக, குளங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
தற்போது பெய்து வரும் மழை வீழ்ச்சியின் அடிப்படையில் குளங்களின் நீர்மட்டம் தொடர்பில் வினவியபோதே, அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.
அந்த வகையில், உன்னிச்சைக் குளத்தில் 3 வான் காவுகள் ஓர் அடி உயரத்திலும், உறுகாமம் குளத்தில் 2 வான் கதவுகள் 6 அடி உயரத்திலும், திறந்து விடப்பட்டுள்ளன.
மேலும், கித்துள்வௌ குளத்தில் 2 அங்குல நீரும், வடமுனைக் குளத்தில் ஒரு அங்குல மேலதிக நீரும் வெளியேறுவதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான பொறியிலார் எஸ்.ஜெயன் பார்த்தசாரத்தி தெரிவித்தார்.
இந்நிலையில், நவகிரிக்குளத்தின் நீர் மட்டமும், தும்பங்கேணிக் குளத்தின் நீர் மட்டமும் அதிகரித்துளளதோடு, இக்குளங்களில் எதுவித வான்கதவுகளும் திடந்துவிடப்படவில்லை என, அக்குளங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர் எம்.பத்மதாசன் தெரிவித்தார்.
இவற்றைவிட களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேற்றாத்தீவு, பெரியபோரதீவு, கேயில்போரதீவு, பொறுகாமம், வெல்லாவெளி உள்ளிட்ட பல இடங்களில் அமைந்துள்ள சிறிய குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிவதையும் அவதானிக்க முடிகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
14 May 2025
14 May 2025
14 May 2025