Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 13 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
கொரனா வைரஸ் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்திலான தீர்மானங்கள் எடுக்கும் கூட்டங்களுக்கு, பிரதேச சபையின் தவிசாளர்கள் எவரும் அழைக்கப்படுவதில்லை என்று, மட்டக்களப்பு மாவட்ட பிரதேச சபை தவிசாளர்கள் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இவ்வாறானக் கூட்டங்களுக்கு தமக்கு அழைப்பு விடுக்காமல், பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சிமன்ற உதவி ஆணையாளரைக்கொண்டு தீர்மானங்களை எடுப்பதை வன்மையாக கண்டிப்பதாக, மேற்படி ஒன்றியத்தின் செயலாளரும் மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளருமான சோ.மகேந்திரலிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பிரதேசசபை தவிசாளர்கள் ஒன்றியத்தின் விசேட கூட்டம், மண்முனைப்பற்று பிரதேசசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பிரதேசசபை தவிசாளர்கள் ஒன்றியத்தின் தலைவரும் மட்டக்களப்பு தென் மேற்கு பிரதேசசபையின் தவிசாளருமான என்.புஸ்பலிங்கம் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இதன்போது கொரனா அச்சுறுத்தல் நிலவும் காலப்பகுதியில் பிரதேச சபைகளால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள், பொதுமக்களுக்கு வழங்கும் வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட பிரதேச சபைகளின் ஒன்றியத்தின் செயலாளரும் மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளருமான சோ.மகேந்திரலிங்கம் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தார்.
பிரதேச சபை தவிசாளர்களின் அதிகாரம் தொடர்பாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கொரனா வைரஸ் தொடர்பாக, மாவட்ட மட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கும் கூட்டங்களில் பங்கேற்பதற்கு அழைப்புவிடுக்கப்படுவதில்லை என்றும் பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் உட்பட்ட அரச அதிகாரிகளைக்கொண்டு மாவட்ட மட்டத்தில் தீர்மானங்கள் எடுப்பதை, மட்டக்களப்பு மாவட்ட பிரதேசசபையின் தவிசாளர்கள் ஒன்றியம் என்ற வகையில் தாங்கள் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago