Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, கே.எல்.ரி.யுதாஜித்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடைய எதிர்பார்ப்பு, இனிமேல் முன்னெடுக்கப்பட முடியாது போன்ற கருத்துகளை, தப்பபிப்பிராயங்கள் என்று வர்ணித்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான கி.துரைராஜசிங்கம், அவ்வாறான எண்ணங்கள் எல்லாம் நீக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், “தமிழ்த் தேசியத்தை வளப்படுத்தக் கூடிய விதத்திலேயான அரசியல் நடவடிக்கைகளுக்குக் கைதரக் கூடிய அரசியற் கட்சிகளுடன் சேர்ந்து செயற்படுவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தயாராகவுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.
கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு, மட்டக்களப்பு, நல்லையா வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில், நேற்று (17) மாலை நடைபெற்றது.
கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான கே.சிவநாதன் தலைமையில் சென்ற குழுவினருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பொதுச்செயலாளர், “கிழக்குத் தமிழர் ஒன்றியத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பைப் பேணுகின்ற அடிப்படையில், அரசியல் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள். நாங்கள் அதற்குச் சாதகமான பதிலை வழங்கியிருக்கின்றோம்.
“அரசியற் கட்சிகள் என்ற ரீதியில், எங்கள் மத்தியில் இருக்கின்ற கொள்கைகளுக்கு எவ்விதமான குந்தகமும் ஏற்படாத வகையிலே, தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தக் கூடிய விதத்திலே, இந்த ஒற்றுமை இருக்க வேண்டுமென, அவர்களுக்குத் தெரிவித்திருக்கின்றோம்.
“அந்த அடிப்படையில், ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் அவர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தி, அதன் பின்னர் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தையை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியத்தை வளப்படுத்தக் கூடிய விதத்திலேயான அரசியல் நடவடிக்கைகளுக்கு கைதரக் கூடிய அரசியற் கட்சிகளுடன் சேர்ந்து வேலை செய்வதற்கு, நாங்கள் முதல்நிலை அளவில் அதற்கான சம்மதத்தை வழங்கியிருக்கின்றோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
3 hours ago