எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தில் கூட்டுறவை அபிவிருத்தி செய்ய துரித நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்டுறவு அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலொன்று, மட்டக்களப்பு மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலக மண்டபத்தில் இன்று (19) நடைபெற்றது.
இதன்போது, ஐந்தாண்டு அபிவிருத்தி வேலைத்திட்டங்களைத் தயாரித்தல், கூட்டுறவு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் முன்னேற்றம், கூட்டுறவு நிதி திரட்டுதல், சர்வதேச கூட்டுறவுத் தினம், ஏனைய கூட்டுறவுச் சங்கங்களின் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தால் கூட்டுறவு அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு, கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருமான எம்.சி.எம்.சரீப் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில், மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் எல்.வி.தங்கவேல், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
1 hours ago
8 hours ago
8 hours ago
07 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
8 hours ago
07 Apr 2026