2025 மே 21, புதன்கிழமை

‘கேட்கத் தயங்குவதாலேயே உரிமைகள் இல்லாமல் போகின்றன’

Editorial   / 2017 செப்டெம்பர் 27 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், பைஷல் இஸ்மாயில்

 

எமது அரசியல்வாதிகள் பலர் எமக்கான  உரிமைகளை கேட்டுப் பெற்றுக்கொள்வதில் காட்டும் தயக்கத்தாலேயே, எம் சமூகத்துக்கான பல நியாயமான உரிமைகள் கிடைக்காமல் போவதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூரில் நேற்று  (26) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் தெரிவித்ததாவது,

“யாருக்கும் அச்சமின்றி தயக்கமின்றி ஆளுமையுடன் எமக்கான நியாயபூர்வமான உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய அரசியல் தலைமைகளை உருவாக்க முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும்.

“கடந்த 2015, 2016ஆம் ஆண்டு கல்வியியல் கல்லூரிகளில் இருந்து  வெளியான கிழக்கு மாகாண ஆசிரியர்கள், வெளிமாகாணங்களுக்கும் தூர மாகாணங்களுக்கும் நியமிக்கப்பட்டனர்.

“ஆனால், மாகாண அரசிலுள்ள நாங்கள் மத்திய அரசின் ஜனாதிபதி மற்றும் பிரதமர், கல்வியமைச்சர் ஆகியோருடன் கதைத்து,  கடந்த இரண்டு வருடங்களும் வெளிமாகணங்களுக்கு நியமனம் பெற்ற எமது ஆசிரியர்களை சொந்த மாகாணத்திலேயே நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுத்தோம்,

“அத்துடன் பட்டதாரிகள் பல்வேறு  போராட்டங்களை முன்னெடுத்த போது,  பலர் அறிக்கைகள் விட்டதுடன், பட்டதாரிகளுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

“ஆனால் நாம், ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கதைத்து முதற்கட்டமாக 1,700 பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். மேலும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

“இவையெல்லாம் தானாக கிடைத்து விடவில்லை. நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நடத்திய பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் மற்றும் கலந்துரையாடல்களின் பின்னரே சாத்தியப்பட்டுள்ளன.

“எனவே, எமது மக்களின் உரிமைகளை கேட்டுப் பெற்றுக் கொள்ளும் அரசியல் தலைமைகளை உருவாகக் மக்கள் முன்வர வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .