2025 மே 14, புதன்கிழமை

கேரளாக் கஞ்சாவுடன் நால்வர் கைது

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 டிசெம்பர் 13 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் 05 கிலோகிராம்  கேரளாக் கஞ்சாவைக் கொண்டுசென்ற நால்வரை, நேற்று (12) மாலை கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடியில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த சொகுசு வானின், மிகவும் இரகசியமான முறையில் இரு பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இக்கேரளாக் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக, களுவாஞ்சிகுடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஜி.யு.ஐ.குணவர்த்தன தெரிவித்தார்.

இதனையடுத்தே, வானிலிருந்த நால்வரையும் கைதுசெய்துள்ள களுவாஞ்சிகுடிப் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .