வா.கிருஸ்ணா / 2020 மார்ச் 15 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்ச நிலைமைகள் காரணமாக, இரத்தம் வழங்குவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி டொக்டர் க.விவேக் தெரிவித்தார்.
இதன்காரணமாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பெரும் இரத்தப்பற்றாக்குறை ஏற்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு – இருதயபுரத்தில், இருதய ஆண்டவர் தோவாலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இன்று (15) காலை இரத்ததான முகாமொன்று நடைபெற்றது.
இந்த இரத்தானமுகாமில் இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டு, இரத்தம் வழங்கினர்.
இதன்போது, மேலும் கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி, “மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறை, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஏனைய நோயாளர்கள் இரத்தப்பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர்” என்றார்.
அதனாலேயே மேற்படி இரத்ததான முகாம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago