2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கொழும்பு - மட்டக்களப்பிற்கு இனி ’புலதுசி’

Freelancer   / 2022 ஜனவரி 26 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு முதல் கொழும்பு வரையிலான அதிவேக குளிரூட்டப்பட்ட ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. 

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொலன்னறுவை - கொழும்பு - கோட்டைக்கிடையில் ஆரம்பிக்கப்பட்ட 'புலதிசி' அதிவேக குளிரூட்டப்பட்ட ரயில் சேவை, போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் தீர்மானத்துக்கமைவாக எதிர்வரும் 28 முதல் மட்டக்களப்பு - கொழும்பு 'புலதிசி' கடுகதி சேவையாக விஸ்தரிக்கப்படவுள்ளது. 

இச் சேவை மட்டக்களப்பிலிருந்து அதிகாலை 01.30 மணிக்கு புறப்பட்டு காலை 08.45 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும். 

மீண்டும் பிற்பகல் 3.05 கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் ரயில் இரவு 9.52 க்கு மட்டக்களப்பு ரயில் நிலையத்தை வந்தடையவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X