2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கோரிக்கைகளை செவிமடுக்குமாறு ஈரலக்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 பெப்ரவரி 25 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் கீழுள்ள ஈரலக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், தமது கோரிக்கைகளை செவிமடுக்குமாறு கோரி, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், இன்று (25), ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்பிரதேச மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு வேண்டி, ஈரலக்குளம் பிரதேச சபை உறுப்பினர் சி.துரைரத்தினம் தலைமையில், இந்த ஆரப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஈரலக்குளம் பிரதேச மக்கள், தமது பிரதேசத்துக்கான முக்கிய பிராதன பாதையான மயிலவட்டுவான் ஆற்றுக்கு மேலாக, பாலமொன்றை நிர்மாணிக்க வேண்டும், பிரமாவடி, குடாவெட்டைக் கள்ளியக்குமாரி போன்ற கிராமங்களில் நிலவும் யானைத் தொல்லைக்குத் தீர்வு காணப்படல் வேண்டும், போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்நிலையில், மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்றமையால், அதில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன், அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில், இவற்றுக்கான தீர்வைப் பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X