2025 மே 19, திங்கட்கிழமை

கோறளைப்பற்றில் 51 டெங்கு நோயாளர்கள்

எம்.எம்.அஹமட் அனாம்   / 2018 மார்ச் 13 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில்  ஜனவரி மாதம் 01ஆம் திகதி தொடக்கம் நேற்று (12) வரையில் 51 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனரென, கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.நஜீப்ஹான் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையைத் தொடர்ந்து, டெங்கு நுளம்புப் பெருக்கத்தைத் தடுக்கும் நோக்கில், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இதனடிப்படையில், அரச திணைக்களங்கள், வீடுகளுக்குச் சென்று அப்பகுதியின் சுற்றுச் சூழல் சுத்தம் தொடர்பாக அவதானிப்பதுடன், டெங்குத் தாக்கம் தொடர்பாகவும் பொதுமக்களை விழிப்படை செய்யும் நடவடிக்கையை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மேற்கொண்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X