2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கோஷ்டி மோதல்; குடும்பஸ்தர் கொலை

Editorial   / 2020 மே 21 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவின் ஜயங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளாரெனவும் மற்றுமொருவர் காயமடைந்துள்ளாரெனவும், பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (19) இரவு இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் இரு பிள்ளைகளின் தந்தையான விஜயபாலன் நிரோஷன் (வயது 25) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.

ஒரு வாரத்துக்கு முன்பு ஆரம்பித்த வாய்த்தர்க்கம் பின்னர் கோஷ்டி மோதலாக மாறியதில் இந்தக் கொலை நிகழ்ந்துள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மீன்பிடித் தொழில் புரிபவரான நிரோஷன், தனது நண்பரின் வீட்டுக்குச் சென்று திரும்பும்போது, ஒரு கோஷ்டியினர் வழி மறித்து இவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாகத் தெரியவருகின்றது.

மேலும் சம்பவத்தில் காயமடைந்த நபர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார், சந்தேகநபர்களைத் தேடி வருவதோடு, மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X