Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
உள்ளூராட்சிமன்றங்களை இணைத்து மேற்கொள்ளப்படும் விசேட கொத்தணி வேலைத்திட்டத்தின் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றதாக மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் தெரிவித்தார்.
வாகரை பிரதேச சபை நிர்வாகத்துக்;குட்பட்ட தட்டுமுனை, ஊரியன்கட்டு ஆகிய கிராமங்களில் கொத்தணி முறையிலான துப்புரவுப் பணிகள் இடம்பெற்றன.
நீரோடைகள், வடிகான்கள், வீதிகள் உட்பட இன்னும் காடு மண்டிக் கிடக்கும் கட்டடங்களும் துப்புரவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த கொத்தணி வேலைத்திட்டத்தின் கீழ் வாகரை மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேச சபைகளின் ஆளணியினர் சுமார் 20 பேரும் இயந்திராதிகளும் பயன்படுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை நிர்வாகத்துக்குட்பட்ட மயிலம்பாவெளியிலும் வவுணதீவு பிரதேச சபை நிர்வாகத்துக்;குட்பட்ட கிராமங்களிலும் நீரோடைகள், வடிகான்கள், வீதிகள் ஆகியவை கொத்தணி வேலைத்திட்டத்தின் கீழ் துப்புரவு செய்யப்பட்டதாக அவர்; கூறினார்.

1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago