Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்கப்பு, காத்தான்குடி தள வைத்தியசாலையில் தற்போது நிலவுகின்ற ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதாக சுகாதாரப் பிரதியமைச்சர் பைஷால் காசீம் மற்றும் சுகாதார அமைச்சின் திட்டமிடல் பிரிவு பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எச்.நீலமணி தலைமையிலான குழுவினர் உறுதியளித்துள்ளனர்.
இந்த வைத்தியசாலைக்கு நேற்றுச் சனிக்கிழமை இக்குழுவினர் திடீர் விஜயம் செய்தபோதே, இதனைக் கூறினர்.
தற்போது காத்தான்குடி வைத்தியசாலையில் 110 பேர் கடமை புரிகின்றனர்.
இந்த வைத்தியசாலையில் சிறப்பான சேவைகளை முன்னெடுப்பதாயின் 18 வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள் 04 பேர், தாதி உத்தியோகஸ்தர்கள் 30 பேர், மருத்துவ மாதுக்கள் 06 பேர், கண்காணிப்பாளர்கள் 13 பேர், சிற்றூழியர்கள் 30 பேர், மருந்தகர்கள் 05 பேர் என்ற அடிப்படையில் 105 ஆளணியினர் தேவையென இக்குழுவினரிடம் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபீர் தலைமையிலான வைத்திய அதிகாரிகள் குழுவினர் எடுத்துக் கூறினர்.
மேலும், வைத்தியசாலையின் திருத்த வேலைகள், கட்டுமானப் பணிகள் என்பனவற்றை உடனடியாக மேற்கொள்வதற்கும் பிரதியமைச்சர் குழுவினர் வாக்குறுதியளித்ததாக அபிவிருத்திக்குழு செயலாளர் டாக்டர் எம்.ரீ.மாஹிர் தெரிவித்தார்.
10 minute ago
25 minute ago
28 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
25 minute ago
28 minute ago
43 minute ago