2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கி.மா. உறுப்பினர் ஒருவரின் நடவடிக்கைக்கு கண்டனம்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ், எம்.எம்.அஹமட் அனாம்,கே.எல்.ரி.யுதாஜித்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் நடவடிக்கையைக் கண்டித்து மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் நேற்றுச்  செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏறாவூரில் அமைந்துள்ள வலயக் கல்வி அலுவலகத்தை திறக்காமல், குறித்த அலுவலகத்துக்கு முன்பாக கல்வி அதிகாரிகளும் ஊழியர்களும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது இவ்வாறிக்க, குறித்த வலயக் கல்விப் பணிப்பாளரைக் கண்டித்து அலுவலகச் சுற்றாடலில் சில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

வாழைச்சேனைப் பிரதேசத்திலுள்ள  பாடசாலை ஒன்றில்  உயர்தர வகுப்பில் விஞ்ஞானப் பிரிவில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவருக்கு பதிலீடு இன்றி இடமாற்றம் வழங்கியதை அடுத்து, வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் மாகாண சபை உறுப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த நிலைமைக்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த உறுப்பினரின்  நடவடிக்கையைக் கண்டித்து  ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலக பிரிவிலுள்ள 26  பாடசாலைகளின் அதிபர்களும் இன்று செவ்வாய்க்கிழமை கடமைக்கு செல்லாமல் சுகவீன விடுமுறையில் நின்று தங்களது எதிர்ப்பை வெளியிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X