Gavitha / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பெண்கள் விடுதி நேற்று வெள்ளிக்கிழமை மாலை (19) உயர் கல்வியமைச்சர் லக்ஷ்மன் கிரியல்லவால் திறந்து வைக்கப்பட்டது.
285 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த விடுதியை திறந்து வைத்த வைபவத்தில், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி கே.ஜெயசிங்கம் உட்பட மருத்துவ பீடத்தின் பீடாதிபதி உள்ளிட்ட கிழக்கு பல்கலைக்கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குறித்த விடுதியில் 136 அறைகள் காணப்படுவதுடன் 270 மாணவிகள் இதில் தங்கியிருக்கக்கூடிய வசதிகள் உள்ளன.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மாணவிகளுக்கு கடந்த காலங்களில் விடுதி வசதி இல்லாத மாணவிகள் பல சிரமங்களை எதிர் நோக்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.



9 minute ago
24 minute ago
27 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
24 minute ago
27 minute ago
42 minute ago