2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2017 ஜனவரி 23 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லதம்பி நித்தியானந்தன்

கிழக்கு பல்கலைகழகத்தில் இடை நிறுத்தப்பட்டுள்ள விரிவுரைகளை மீண்டும் ஆரம்பிக்க கோரி, பல்கலைக்கழத்தின் பிரதான  வயிலுக்கு முன்னால் இன்றையதினம் (23) ஒன்றுகூடிய மாணவர்கள்,  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு பல்கலைகழக மாணவர்களின் விடுதி உரிமைப் போராட்டம் காரணமாகப் பல்கலைகழகத்தில் விரிவுரைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளனன.

முன்னதாக கடந்த சனிக்கிழமை, மாணவர்கள் அனைவரையும் பல்கலைகழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

மாணவர்கள் வெளியேற விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு, சனிக்கிழமை காலை 8.00 மணியுடன் முடிவடைந்த போதிலும் தொடர்ந்தும் மாணவர்கள் நிர்வாகக் கட்டடத்தில் தங்கியுள்ளனர்.

விடுதி வசதியுடள் மீண்டும் விரிவுரை ஆரம்பிக்கக் கோரி இன்று நண்பகல் நிர்வாக கட்டடத் தொகுதியிலிருந்து பேரணியாகப் புறப்பட்ட மாணவர்கள் வந்தாறுமூலை பிரதான வாயிலை சென்றடைந்து, தங்கள் உரிமைகளை வலியுறுத்தும் வகையில் வாசக அட்டைகளை ஏந்தியவாறு, கோசங்களை எழுப்பினார்கள்.

இதேவேளை, பல்கலைகழகத்தின் மாணவர்கள் 10 பேர், இன்றையதினம், ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டு, நாளை (24) நீதிமன்றத்துக்கு அஜராகுமாறு அறிவிக்கப்பட்டதாக, மாணவர் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X