2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கிழக்கு மாகாணத்தில் கூட்டுறவுத்துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 13 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாணத்தில் நலிவடைந்துள்ள கூட்டுறவுத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு மாகாணசபை நடவடிக்கை எடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.கனகசுந்தரம் தெரிவித்தார்.

ஏறாவூர் வடக்கு, மேற்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் 'கூட்டுறவும் நோக்கமும்' விழிப்புணர்வுச்  செயற்றிட்ட நிகழ்வு இன்று  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோதே, அவர்  இதனைக் கூறினார்.

ஏறாவூர் வலய பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினர், கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினர், தெங்கு உற்பத்திக் கூட்டுறவுச் சங்கத்தினர், சிக்கன கடன் உதவிக் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது,'கூட்டுறவு என்பது இன, மத, மொழி பேதங்களைக் கடந்த மக்களுடைய இயக்கம் ஆகும்.  கூட்டுறவு இயக்கம் மாத்திரமே சுரண்டலற்ற இயக்கமாக நிலை நாட்டப்பட்டது. அத்துடன், அங்கத்தவர்களின் சமூக பொருளாதார, வளர்ச்சியில் பங்குகொள்ளக்கூடிய இயக்கமாகவும் அது உள்ளது.

ஆயினும், சமீபகால யுத்தம் மற்றும் வினைத்திறனற்ற செயற்பாடுகளால் பின்னடைவு கண்டுள்ள கூட்டுறவுத்துறையை சீரமைத்து, அபிவிருத்திப் பாதையில் கொண்டுசெல்லும் நடவடிக்கையில் கிழக்கு மாகாணக் கூட்டுறவுத்துறை அமைச்சு ஈடுபட்டுள்ளது' என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  பதிவு செய்யப்பட்ட சுமார் 500  கூட்டுவுறச்  சங்கங்களில் சுமார் 400 சங்கங்களே இயங்குகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X