Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Kogilavani / 2015 செப்டெம்பர் 20 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடிவேல்-சக்திவேல்
'கடந்த 25 வருட காலத்துக்குள் கிழக்கு மாகாணத்திலே எந்தவித முதலீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. பிறிமா, டோக்கியோ, சீமெந் ஆகிய முதலீடுகளைத்தவிர திருகோணமலையிலிருந்து பொத்துவில் வரையில், பாரிய முதலீடுகள் இல்லாமல் கிழக்கு மாகாணம் திட்மிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ள வரலாற்றை ஜனாதிபதி மாற்ற வேண்டும் என்பதை எதிர்பார்க்கின்றோம்' என கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையில் புதிதாகக் கட்டப்பட்ட நோயாளர் விடுதி திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் பொதுவாக ஆளணிப்பற்றாக்குறை நிலவுகின்றது. இவ்வாறான பற்றாக்குறைகளைத் தீர்த்து வைக்கின்ற பொறுப்பு அரசியல்வாதிகளாகிய எமக்கு உள்ளது. எனவே கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைகளை மிகக் குறுகிய காலத்துக்குள் நாங்கள் தீர்த்து வைப்போம்.
வைத்தியத்துறை என்பது ஒரு கிராமத்தினுடைய இதயமாக இயங்க வேண்டியதாகும். இதனை யாரும் மறுக்க முடியாது. ஜனாதிபதி கடந்த காலத்தில் சுகாதார அமைச்சராக இருந்தவர் என்ற காரணத்தினாலும் கிழக்கில் சுகாதாரத் துறையில் நிலவும் ஆளணிப் பாற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய ஜனாதிபதியுடன் பேசி இவற்றுக்குத் தீர்வு காண்போம்.
செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாவைக்கு மிகவும் அவசியமாகவுள்ள பிரேத அறையை எமது கிழக்கு மாகாணசபையினூடாக கட்டித்தரப்படும், என்பதோடு இவ்வைத்தியசாலையில் காணப்படும் அனைத்து குறைபாடுகளையும் நான் நிச்சியமாக நிவர்த்தி செய்து தருவேன்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago