Niroshini / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
கிழக்கு மாகாணத்தில் கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்காக கிழக்கு மாகாணத்தினால் கோரப்பட்டுள்ள விண்ணப்பத்தில் தமிழ் நுண்கலைத்துறை மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.
தமிழ் நுண்கலைத்துறை பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் மேலும் குறிப்பிடுகையில்,
கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பெருவாரியாக நுண்கலைத்துறை பட்டதாரிகள் நியமிக்கப்படவில்லை. இவ்வாறு நியமிக்கப்படாததினால் நுண்கலைத்துறைப்பிரிவில் அடங்குகின்ற சித்திரம், நடனம், நாடகமும் அரங்கியலும், சங்கீதம் போன்ற பாடத் தெரிவுகளில் தமக்கு விருப்பமான, ஆர்வமுள்ள பாடத்துறைகளுக்கு ஆசிரியர்கள் இன்மையால் அப்பாடசாலையில் இருக்கின்ற பாடத்தினை மட்டும் மாணவர்கள் கற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
மேலும், இவ்வாறு அங்கு இருக்கின்ற மாணவர்கள் பாடசாலையில் இருக்கின்ற பாடத்தினை மட்டும் கற்பதற்கு ஈடுபடுத்தப்படுவதினால் ஏனைய பாடங்களுக்கு மாணவர்கள் இல்லையெனக் கூறி நுண்கலைத்துறைப் பாடங்களுக்கான ஆளணி தேவை இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றது.
தமிழர்களது கலாசாரத்தினை நிலைநிறுத்தும் நுண்கலைத்துறைப் பாடங்கள் பாடசாலைகளில் கற்பிக்காததினால் தமிழர்களது காலாசாரமும் புறக்கணிக்கப்படுகின்றதா? என சந்தேகிக்க தோன்றுகின்றது. 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை நுண்கலைத்துறையில் விசேட பட்டம் பெற்ற பட்டதாரிகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.
400க்கும் மேற்பட்ட தமிழ் நுண்கலைத்துறைத்துறை பட்டதாரிகள் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்றனர். குறித்த பட்டதாரிகளின் பாதிப்புக்கு காரணம் யார்? இவ்வாறான பட்டப்படிப்பு தேவையா? தமிழ் நுண்கலைத்துறை பட்டப்படிப்பு கல்லூரிகள் தேவைதானா? போன்ற வினாக்களினை கருத்தில் கொண்டு நுண்கலைத்துறை பட்டதாரிகள் அனைவருக்கும் பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களை இனங்கண்டு, இதற்கான ஆளணி அனுமதியினை பெற்று உடனடியாக நுண்கலைத்துறை ஆசிரியர்களை நியமித்து தமிழர்களது பண்பாட்டு விழுமியங்களை கட்டிக்காக்க வழிவகை செய்ய வேண்டும்.
மேலும், கடந்த காலங்களில் இவ்வாறானவர்களை ஆசிரியர் சேவையில் ஈடுபடுத்தாமை தொடர்பிலான விசாரணையை கல்வி அமைச்சர் மேற்கொள்ள வேண்டும். கல்வி அமைச்சர் தாமதித்தால் க.பொ.த(சா.த) பரீட்சையில் கடந்த 2015ஆம் ஆண்டு தேசிய ரீதியில் கிழக்கு மாகாணம், மாகாண அடிப்படையில் 9ஆம் இடத்தினை பெற்றது போன்று நுண்கலைத்துறை பாடங்கள் பல இல்லாமல் போகும் நிலை ஏற்படும்.
தமிழ்த் தேசியத்தை பேசுகின்ற கட்சியையுடைய நாம் நுண்கலை பாடத்தில் உள்ள பலவீனங்களை அறியாமல் இருப்பதும் வேதனைக்குரியதே. நீண்டகாலமாக நுண்கலைத்துறைக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாத காரணத்தினால், இன்று இப்பாடத்துக்கான ஆளணி குறைப்பாடாக உள்ளது என்றார்.
10 minute ago
25 minute ago
28 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
25 minute ago
28 minute ago
43 minute ago