2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சங்கிலியை அபகரித்தவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கடற்கரையில் பெண் ஒருவரின் தங்கச்சங்கிலியை அபகரித்த குற்றச்சாட்டில் ஒருவரை திங்கட்கிழமை மாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சவுக்கடிக் கடற்கரையில் பொழுதுபோக்காக ஜோடியொன்று அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, சவுக்குமரக் காடுகளுக்குள் இருந்து திடீரெனப் பிரவேசித்த மூவர,; குறித்த பெண் அணிந்திருந்த இரண்டு பவுண் தங்கச் சங்கிலியையும் அதனுடன் கூடிய 27 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பென்ரனையும் அபகரித்துக் கொண்டு சவுக்குமரக் காட்டுக்குள் மாயமாக மறைந்துள்ளனர்.

நகைகளைப் பறிகொடுத்த குறித்த பெண், இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனை அடுத்து 26 வயதுடைய மேற்படி சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய இருவரும் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X