2025 மே 01, வியாழக்கிழமை

சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வேண்டுகோள்

Editorial   / 2020 செப்டெம்பர் 17 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சந்தனமடு ஆற்றில் மீட்கப்பட்ட ஆணின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு, ஏறாவூர் பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சந்தனமடு ஆற்றில் நேற்று (16) பிற்பகல் ஆணின் சடலமொன்று மிதந்த நிலையில் கிடப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, ஸ்தலத்துக்குச் சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளனர்.

தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள இந்தச் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு, பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளார்கள்.

விவரம் தெரிந்தோர் 065 2240487 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு, ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்க முடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .