Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
ரீ.எல்.ஜவ்பர்கான் / 2018 டிசெம்பர் 30 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த திரவப் பொருள் உணவு உற்பத்தி நிலையமொன்று, காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் முன்னிலையில், சுகாதாரப் பரிசோதகர்களால் இன்று (30) காலை முற்றுகையிடப்பட்டது.
போத்தலில் அடைக்கப்பட்ட எலுமிச்சம் பழச்சாறு, குளுக்கோஸ் பக்கெட்டுகள், ஓமத்திரவம் உட்பட பல திரவ உணவுப் பொருட்கள் போலியான முறையில் இங்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளின் பெயர்களில் தயாரிக்கப்படுவதாக அச்சிடப்பட்ட லேபிள்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
இங்கு தயாரிக்கப்படும் போலியான திரவப் பொருட்கள், மேற்படி போலி லேபிள்கள் ஒட்டப்பட்டு, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டக் கடைகளில் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த நிலையத்தின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ள நிலையில், சுகாதாரப் பிரிவினர் அவரைத் தேடி வருகின்றனர்.
குறித்த சட்டவிரோத உற்பத்தி நிலையம், சுகாதார பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago