2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத சாராயம் கைப்பற்றப்பட்டது

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 மார்ச் 12 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள முனைக்காடு, கண்ணாக்காடு பிரதேசத்தில், சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட 8 பரல் வடி சாராயத்தை, நேற்று முன்தினம் (10) கைப்பற்றியதாகவும் சந்தேகநபரொருவரையும் கைதுசெய்துள்ளதாகவும், கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவு விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக சாராயம் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நான்கு பேரில் மூவர் தப்பிச் சென்றுள்ளதுடன், ஒருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சாராயம் தயாரிக்கப் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X