Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Princiya Dixci / 2020 ஒக்டோபர் 12 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன் , பாறுக் ஷிஹான்
அம்பாறை - திருக்கோவில் பிரதேசத்தில் இயங்கி வந்த சட்டவிரோத துப்பாக்கிகள் தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்று, தேசிய புலனாய்வுப் பிரிவினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது, துப்பாக்கிகள் தயாரிப்பில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் ஒருவர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த திருக்கோவில் பொலிஸார், 10 துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்தனர்.
தேசிய புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், திருக்கோவில் பிரதான வீதியிலுள்ள அம்மன் கோவிலுக்கு முன்னாள் இயங்கிவந்த மேற்படி சட்டவிரோத துப்பாக்கிகள் தயாரிப்புத் தொழிற்சாலையை நேற்று (11) முற்றுகையிட்டனர்.
அங்கு உள்ளூர் துப்பாக்கித் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த 60 வயயதுடைய தம்பிலுவிலைச் சேர்ந்த ஒருவரைக் கைதுசெய்தனர்.
இதனையடுத்து, துப்பாக்கியின் மரத்திலான பிடியைத் தயாரித்து வந்த தச்சுத் தொழிலாளியான தம்பிலுவிலைச் சேர்ந்த 40 வயதுடைய முன்னாள் போராளியையும், தயாரிக்கப்படும் துப்பாக்கிகளை விற்பனை செய்து வந்த காஞ்சரம்குடாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
8 hours ago