2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வு; ஐவர் கைது

எம்.எம்.அஹமட் அனாம்   / 2019 பெப்ரவரி 25 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெவ்வேறு இடங்களில், ஐந்து டிரெக்டர் வண்டிகள் மூலம் சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த ஐவர், இன்று (25) கைதுசெய்யப்பட்டுள்ளனரென, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

இதற்கமைய, பொத்தானை பகுதியில் வைத்து, மூன்று டிரெக்டர் வண்டிகளுடன் மூவர் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கிரான் - புலிபாய்ந்தகல் பகுதியில், சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிவந்த மற்றுமொரு டிரெக்டரையுடன் அதைச் செலுத்திவந்த சாரதியையும் கைதுசெய்துள்ளதாகக் கூறினார்.

மேலும், காவத்தமுனை பகுதியிலும், டிரெக்டர் ஒன்றுடன் மற்றுமொருவர் கைதுசெய்யப்பட்டதாகக் கூறிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம், தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகக் கூறினார்.

இதேவேளை, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்கும் முகமாக, பொத்தானை, பொண்டுகள்சேனை, வாகனேரி, ஆத்துச்சேனை, புலியாந்தகல் போன்ற பகுதிகளில், சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X