Editorial / 2018 மார்ச் 21 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல், ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, கண்ணபுரம் 35ஆம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 31 வயதுடைய தங்கராசா மகேஸ்வரன் என்பவர், இன்று (21) அதிகாலை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளாரென, உகன பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாது,
தமது கால்நடைகளை மேய்த்து வருவதற்காக 35ஆம் கிராமத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கோணகல 32ஆம் கிராமப் பகுதிக்கு, இவர் சென்றுள்ளார்.
அவ்வேளையில், அங்கு சட்டவிரோதமான முறையில் வேலிகளில் பாய்ச்சப்பட்டிருந்த மின்சாரத்தால் தாக்கப்பட்டு, ஸ்த்தலத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
விடயமறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த உகன பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
32ஆம் கிராம கோணகல பகுதி, காடு சார்ந்த பகுதியாகக் காணப்படுவதால், பெரும்பாலான பண்ணையாளர்கள், அங்கு கால்நடைகளை மேய்த்து வருவது வழமை.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மையின சமூகப் பண்ணையாளர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையின சமூக பண்ணையாளர்களும் கோணகல பகுதியை மாடு மேய்ப்புக்காகவே பயன்படுத்தி வருவதாக, உள்ளூர் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், வழமை போன்று இன்று அதிகாலை தமது கால்நடைகளை மேய்க்கச் சென்ற பண்ணையாளரே, மின்னிணைப்பில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
இந்த மின்னிணைப்பு, வேலிகளில் சட்டவிரோதமான முறையில் பாய்ச்சப்பட்டிருந்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
25 minute ago
33 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
33 minute ago
44 minute ago