Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2020 பெப்ரவரி 17 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
“பெண்களின் தலைமைத்துவமும் பெண்களின் பாதுகாப்பும் தொடர்பிலான சட்ட விழிப்புணர்வு” எனும் தொனிப்பொருளில் அமைந்த பயிற்சிப்பட்டறை, மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசியக் கல்லூரியில் நேற்று (16) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட 'அருவி' பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில், அதன் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், மட்டக்களப்பு மாவட்டத்தின் 8 பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் கற்கும் 50 மாணவிகள் பங்குபற்றினர்.
கருத்தரங்கில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இதில், பெண்களின் பாதுகாப்புத் தொடர்பிலான சட்ட விழிப்புணர்வுகளை, அருவி நிறுவனப் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான மயூரி ஜனனும், “மாணவர் ஒழுக்கமும் தலைமைத்துவமும்” எனும் தொனிப்பொருளில், மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ். சுஜாதா குலேந்திரகுமார் ஆகியோரும் வழங்கினர்.
மேலும், மட்டக்ளப்பு கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசகர் ஏ.ஜெகநாதன், தென்கிழக்குப் பல்கலைக்கழக சிவில் பொறியியல் பீட மென்திறன் பயிற்றுநர் றிசாத்ஆதம்லெப்பை ஆகியயோரும் வளவாளர்களாகக் கலந்துகொண்டு, பயிற்சிகளை வழங்கினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago