2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சட்டம், மனித உரிமையை நிலைநாட்ட பாதுகாப்புக்குழுக்கள் முனைப்புடன் செயற்பட வேண்டும்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 01 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சட்டத்தையும் மனித உரிமையையும் நிலை நாட்டுவதில் பாதுகாப்புக் குழுக்கள் முனைப்புடன் செயற்பட வேண்டுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவி;ன் கூட்டம், சாள்ஸ் மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'ஒரு நாட்டில் சட்ட ஆட்சி நிலைத்திருக்க வேண்டுமாயின் சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகியன  சுதந்திரமாக இயங்க வேண்டும். இதனை உரிமையி;ன் அடிப்படையி;ல் நோக்குவோமாயின், ஓர் உரிமையை மேம்படுத்துவது பிற உரிமைகளையும் மேம்படச் செய்கி;ன்றது. அதேபோன்று, ஓர் உரிமையை மறுப்பது பிற உரிமைகளை எதிர்மறையாகப் பாதிக்கின்றது' என்றார்.

'மேலும், எவருக்கும் எங்கேயும் கௌரவத்துடன் வாழும் உரிமை உள்ளது. ஒரு மனிதனுக்கு ஏற்படும் அடிப்படை உரிமை மீறல்களை புலனாய்வு செய்து, விசாரணை மேற்கொள்வதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அதிகாரமுள்ளது.

எமது அன்றாட வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ள சட்டம் பற்றிய அறிவு எல்லோரிடமும்; இருக்க வேண்டுமென்பது பொதுவான கோட்பாடாகும். சட்டம் பற்றி தெரிந்துகொள்வதற்குரிய சந்தர்ப்பங்கள் அதிகமாக இருந்தும், அவற்றை பொதுமக்கள் அறி;ந்துகொள்வதில் சிரமங்கள், நடைமுறைப் பிரச்சினைகள் காணப்படுகின்றன.
சட்டமானது அனைவருக்கும் சமனான வகையில் ஏற்புடையது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X